நிலை 2 - Primary Tamil-II
Overview
Courses
நிலைக் கையேடு
Overview
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 6 வயது.தகுதி :
அ த க நிலை 1 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உயிர், மெய் எழுத்துக்கள் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.நோக்கம் :
தமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல். பெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல். ஒவ்வொரு பாடத்திலும் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள் மற்றும் பாடல்கள் கற்றறிதல்.மொழித்திறன் :
- தமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல்.
- ட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல்.
- உயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல்.
- ஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.
- குறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது சொற்களையாவது அறிதல், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தல்.
Courses
பாடத்திட்டம் :
1. தமிழ் மொழி அறிமுக நிலை – உயிர்மெய் எழுத்துக்கள்.
2. படித்தல்/அடையாளம் காட்டுதல் . உதாரணங்களுடன் உச்சரித்தல்.
3. எழுத்துப்பயிற்சி.
4. சிறிய கதைகள் / பாடல்கள், விலங்குகள், பறவைகள், குழுவாக விளையாடுதல்.
5. ஆத்திச்சூடி/ திருக்குறள் / பழமொழி
வயது: 4.5 வயதுக்கு மேல் / 6 வயதுக்கு மிகாதவர்களுக்கான நிலை இது.
இந்த நிலை முடிவில் உயிர் மெய் எழுத்துக்களுடனான சில கதைகள், பாடல்களுடன், சுமார் 200 தமிழ் வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும்.
பாடங்கள் :
- பாடம் 1. ட, ட், ப, ப், ம, ம், ச, ச்
- பாடம் 2. க, க், த, த், ந, ந், வ, வ்
- பாடம் 3. ய, ய், ர, ர், ல, ல், ன, ன்
- பாடம் 4. ண, ண், ள், ள, ழ், ழ, ங், ங
- பாடம் 5. ஞ, ஞ், ற, ற், அ, ஆ
- பாடம் 6. இ, ஈ, உ, ஊ, எ
- பாடம் 7. ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
- பாடம் 8. கா, சா, டா, தா, பா, றா
- பாடம் 9. யா, ரா, லா, வா, ழா, ளா
- பாடம் 10. ஙா, ஞா, ணா, நா, மா, னா
- பாடம் 11. கி, சி, டி, தி, பி, றி
- பாடம் 12. யி, ரி, லி, வி, ழி, ளி
- பாடம் 13. ஙி, ஞி, ணி, நி, மி, னி
- பாடம் 14. கீ, சீ, டீ, தீ, பீ, றீ
- பாடம் 15. யீ, ரீ, லீ, வீ, ழீ, ளீ
- பாடம் 16. ஙீ, ஞீ, ணீ, நீ, மீ, னீ
- பாடம் 17. கு, சு, டு, து, பு, று
- பாடம் 18. யு, ரு, லு, வு, ழு, ளு
- பாடம் 19. ஙு, ஞு, ணு, நு, மு, னு
- பாடம் 20. கூ, சூ, டூ, தூ, பூ, றூ
- பாடம் 21. யூ, ரூ,லூ, வூ, ழூ, ளூ
- பாடம் 22. ஙூ, ஞூ, ணூ, நூ,மூ, னூ
- பாடம் 23. கெ, செ, டெ, தெ, பெ, றெ
- பாடம் 24. யெ, ரெ, லெ, வெ, ழெ, ளெ
- பாடம் 25. ஙெ, ஞெ, ணெ, நெ, மெ, னெ
நிலைக் கையேடு