நிலை 8 - Advanced Tamil
Overview
Courses
நிலைக் கையேடு
Overview
வயது வரம்பு :
குறைந்த பட்சம் 10 வயது.தகுதி :
அ.த.க நிலை 6 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; சுயமாக எளிய வாக்கியங்களை எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல். மேலும் தமிழில் அடிப்படை உரையாடல் திறன் பெற்றிருக்க வேண்டும்.நோக்கம் :
மொழித்திறன் :
வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல். மொழி மாற்றம் செய்தல்; பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல். வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல். பேச்சுத் தமிழில் அமைந்திருக்கும் உரையாடல் பாடங்களை பயின்று பொருளறிதல். எளிமையான கட்டுரை, கடிதம் எழுதுதல். கதையைப் படித்து புரிந்துக் கொண்டு விடுபட்ட பகுதியை நிறைவு செய்தல்.இலக்கணம் :
- பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சி நூல்களின் வாயிலாக பயிலுதல்.
- வினைப்பாகுபாடுகள் (verb classes)
- வேற்றுமையுருபுகள் (declension)
- வினைத்தொகை / பண்புத்தொகை (implied verbs / nouns)
- உவமை ./ உருவகம் (simile / metaphor)
- சொல்லுருபு (post position)
- தொடர்வினைகள்(continuous progressive tense)
- துணைவினைகள் (auxiliary verbs)
- நேர்க்கூற்று, நேரல்கூற்று (direct indirect speech)
- பகுபதம், பகாப்பதம்(derivative / primitivewords)
- மரபுத்தொடர் / வழக்குத்தொடர் (slangs / idioms)
- இயல்பு/விகாரப் புணர்ச்சி (combination / compounding)
உரையாடல் :
மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஒலிக்கோப்பினைக் கேட்டு அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் ஒலி வடிவில் தங்கள் விடையை பதிவு செய்து ஒலிக்கோப்பாக அனுப்பி வைத்தல். Courses
Will be updated soon.
நிலைக் கையேடு